நோக்கு
கேகாலை மாவட்டத்தில் மிகச் சிறந்த மற்றும் முன்மாதிரியான அரச சேவை வழங்குநராகத் திகழ்வது
பணிக் கூற்று
''அரச கொள்கைகளுக்கு அமைய, வளங்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, சமூகப் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம், திட்டமிடப்பட்ட நிலையான அபிவிருத்திச் செயல்முறையின் ஊடாக, அரணாாயக பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்மையான நிலைக்கு உயர்த்துவது''

அரணாயக பிரதேச செயலகத்தின் வரலாறு......
கல்பாத கோறளைப் பிரதேச வருவாய்த் திணைக்கள அலுவலகம் திப்பிட்டிய பிரதேசத்தில் ஒரு தற்காலிக கட்டிடத்தில் நிறுவப்பட்டது. பின்னர், அது திரு. ஏ.எம்.எஸ்.பி. அதிகாரியின் அரணாயக பிரதேச உதவி அரசாங்க அதிபர் காலத்தில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.
அரணாயக பிரதேச உதவி அரசாங்க அதிபர் அலுவலகம், கௌரவ அரணாயக பாராளுமன்ற உறுப்பினர், திரு. வசந்த உதயரத்னவின் அழைப்பின் பேரில், 1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கௌரவ அமைச்சர் திரு. கே.டபிள்யூ. தேவனாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் பிரதேச செயலகமாக மாற்றப்பட்ட பின்னர், அரணாயக பிரதேச செயலகம் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி கௌரவ உள்நாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி. அமர பியசிலி ரத்நாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பிரிவின் மேலோட்டம்
அரணாயக பிரதேச செயலகம் இலங்கையின் சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 61 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரிவில் 160 கிராமங்கள் உள்ளன.
அரணாயக பிரதேச செயலகத்திற்கு சொந்தமான மொத்த நிலப்பரப்பு 119.47 சதுர கி.மீ ஆகும். 2012ஆம் ஆண்டு இலங்கை சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்படி, மொத்த சனத்தொகை 187,455 ஆகும். இதில் 88,004 ஆண் சனத்தொகையும் 99,451 பெண் சனத்தொகையும் அடங்கும்.
பிரதேச செயலகத்தின் எல்லைகள்
வடக்கு - மாவனெல்ல பிரதேச செயலகம்
தென்-கிழக்கு - கண்டி மாவட்டம்
தெற்கு - யட்டியாந்தோட்டை பிரதேச செயலகம்
மேற்கு மற்றும் வடமேற்கு - கேகாலை பிரதேச செயலகம்
இப்பிரிவின் சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 2500-3000 மி.மீ ஆகும். பிரதான நீராதாரமாக மா ஓயா உள்ளது. குடா ஓயா, குருங்கொட ஓயா ஆகியவை அதன் கிளை ஆறுகளாகும்.
அரணாயக பிரிவில் இயற்கையின் அழகிய காட்சிகளும், தேசிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. பத்தலேகல, அசுபினி எல்ல, மா ஓயா மற்றும் பலும்கல ஆகியவை இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசுகளாகும். செலவ ராஜமகா விகாரை, தேவனகல புராண விகாரை மற்றும் வகிரிகல விகாரை ஆகியவை இப்பிரதேசத்தின் வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றுகின்றன. புராணங்களின்படி, அரணாயகவின் வரலாறு இராவண மன்னன் காலத்திற்கு செல்கிறது. இராவண மன்னன், சீதா தேவியை அரணாயக பிரிவில் உள்ள ரஹல கல என்ற இடத்தில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் இப்பிரதேசம் இராசதானி காலத்தில் நகரமயமாக்கப்பட்டதற்கான சான்றுகளாகும். மேலும், இப்பிரதேசத்தின் அட்டபிட்டிய பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஒரு மையத்தை அமைத்து நாட்டை ஆட்சி செய்த காலப்பகுதியையும் வரலாறு கூறுகிறது.
பிரதேச செயலகத்தில் ஆற்றிய பங்கு
|
காலப்பகுதி |
பெயர் |
பதவி |
|
1973-1977 |
Mr. A.M.S.B Adhikari |
பிரதேச வருவாய்த் திணைக்கள அதிகாரி/உதவி அரசாங்க அதிபர் |
|
1977-1978 |
Mr. W.Godawela |
உதவி அரசாங்க அதிபர் |
|
1978-1979 |
Mr P.H Gamage |
உதவி அரசாங்க அதிபர் |
|
1979-1990 |
Mr. A.M.S.B Adhikari |
உதவி அரசாங்க அதிபர் |
|
1990-1991 |
Mr. S.P. Sunilhewa |
உதவி அரசாங்க அதிபர் |
|
1991-1992 |
Mr S.W. amarathunga |
உதவி அரசாங்க அதிபர் |
|
1992-1995 |
Mr. A.K. Dharmadasa |
பிரதேச செயலாளர் |
|
1995-2002 |
Mr. K.P Perera |
பிரதேச செயலாளர் |
|
2002-2005 |
Mr. W.A.R Wimalasiri |
பிரதேச செயலாளர் |
|
2005-2011 |
Mr. Wanninayake |
பிரதேச செயலாளர் |
|
2011-2015 |
Mr. A.R Rajaratna |
பிரதேச செயலாளர் |
|
2015-2023 |
Mr. Z.A.M.Faizal |
பிரதேச செயலாளர் |
|
2023-2024 |
Ms. B.O.L.S.Rathnasekara |
பிரதேச செயலாளர் (பதவியணி) |
| 2024-present | Ms.S.Piyathissa |
பிரதேச செயலாளர் |


















